இலங்கையை வந்தடைய உள்ள ´ஸ்புட்னிக்-வி´ தடுப்பூசிகள்

177 0

இரண்டாவது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ´ஸ்புட்னிக்-வி´ தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளதாக சுகாதார அமைச்சர் கெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

´ஸ்புட்னிக்-வி´ தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்ட கண்டி மாவட்ட மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது. 3 நாட்களுக்குள் இந்த தடுப்பு ஊசிகளை ஏற்றி முடிக்க எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தேவையில்லாமல் நிதியை செலவிட்டு மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டிய தேவையும் இல்லை. ´சுபீட்சத்தின் தொலைநோக்கு´ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் நாட்டிற்கு தேவையான அனைத்து மருந்துகளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.