மட்டு நகரில் நடமாடியவர்களில் 17 பேருக்கு கொரோனா!

180 0

மட்டக்களப்பு நகரில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியவர்கள் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை இன்று திங்கட்கிழமை (13) காவல்துறையினர். பொது சுகாதார அதிகாரிகள் சுற்றிவளைத்து பஸ்வண்டியில் ஏற்றிச் சென்று அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

மட்டு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கோட்டமுனை சுகாதார  பிரிவிலுள்ள கூளாவடி, பார்வீதி போன்ற பிரதேசங்களில் இந்த சோதனை நடவடிக்கை காவல்துறையினர். பொது சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்தனர். இதன்போது  கடடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டோரையும் வீதிகளில் தேவையின்றி நடமாடியவர்கள் நூறு பேர்வரையில் பிடித்து காவல்துறை பஸ்வண்டியில் ஏற்றி கொண்டு சென்று பார்வீதியில் அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் நூறுபேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்  17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அதேவேளை மாவட்டத்தில் டெல்டா வைரஸ் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி அதிகளவில் நாளாந்தம் நடமாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.