15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ் வு – லண்டன், 12.9.2021

336 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது லண்டன் டூட்டிங் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .
தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ள வரை போராடி வீர காவியமான அவர்களது வீர வணக்க நிகழ்வை செய்ய முடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கபட்டுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழீழ விடுதலை வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உறுதிப்படுத்தப்பட்ட மவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு , வீரவேங்கை இதயன் , வீரவேங்கை பிரியவதனா , வீரவேங்கை புலியரசன் , வீரவேங்கை புதியவன் , வீரவேங்கை தீப்பொறி , வீரவேங்கை அன்பரசன் / லோரன்ஸ் , வீரவேங்கை கவியரசி / அமலா , வீரவேங்கை முகிலன் , வீரவேங்கை நிறையிசை , வீரவேங்கை கரிகாலன் , வீரவேங்கை சுதாகரி , வீரவேங்கை இசைவாணன் , வீரவேங்கை பல்லவன் ஆகியோருக்கான வணக்க நிகழ்வு இடம்பெற்றது .

நிகழ்வின் ஆரம்பமாக மாவீரன் கப்டன் அருந்ததியின் தாயாராகிய அசலாம்பிகை சண்முகநாதன் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள் .
தமிழீழ தேசிய கொடியினை முன்னை நாள் மன்னார் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் .
தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இம் மாவீரர்களுக்கான பொதுப்படம் மற்றும் 15 மாவீரர்களுக்கான திரு உருவ படங்களுக்கும் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவீரர்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து 15 மாவீரர்கள் சார்ந்த நினைவு உரைகள் இடம்பெற்றன , இறுதியாக மாவீர குடும்பங்களுக்கு தமிழீழ தேசிய கொடிகள் கையளிக்கப்பட்டு , தமிழீழ தேசிய கொடி கையேந்தப்பட்டது . தமிழரின் தாரக மந்திரமான ” தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ” என்ற கோசத்தோடு நிகழ்வு நிறைவு பெற்றது .