சபுகஸ்கந்த பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் நேற்று முன்தினம் இரவு இந்த இடம்பெற்றுள்ளது. யெஹான் சானுக்க டி அல்விஸ் என்ற 27 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மாகொல பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு வருகைத்தந்த சானுக தனது நண்பர் ஒருவருடன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். எனினும் தங்களிடம் எதுவும் கூறமால் திருமணம் செய்யவிருக்கும் மணமகளிடம் மாத்திரம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனாலும் மகனை வெளியே அழைத்து சென்ற இளைஞனை எங்களுக்கு பிடிக்காதென உயிரிழந்த இளைஞனின் தயாார் குறிப்பிட்டுள்ளார். எனினும் சற்று நேரத்தில் மகன் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞனை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நண்பர் 8 வருடங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கு நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் கடந்த மாதம் 19ஆம் திகதி திருமண நிச்சியம் செய்து கொண்ட நிலையில் எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்ய தயாராகியுள்ளார். அதற்காக photo shoot செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலை சம்பவத்திற்கான உறுதியான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

