ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும் 50 ஆவது கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை உயர்ஸ்தானிகர் சமர்பிப்பார்.
ஆனால் அது இலங்கை விடயத்தில் பெரிதாக தாக்கத்தை செலுத்தாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை. சுயாதீன விசாரணையை நடத்தவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினா

