யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது

121 0

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா  நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற போக்கு சற்று  குறைவடைந்து காணப்படுகின்றது .

யாழில் நேற்று  213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மொத்தமாக 13 944 பேர்  மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ளது   அதேநேரம் 5641 குடும்பங்கள் யாழில்  தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும்  செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது  முதலாவது டோஸ் தடுப்பூசி 2 லட்சத்து 965 ஆயிரத்து 315 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது அதேநேரம் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஆனது நேற்றைய வரை 215552  பேருக்கு வழங்கப்பட்டுள்ளது

தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது மேலும் 30 வயதிற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய  ஏற்பாடுகள் சுகாதாரப்பிரிவினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய விவரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக  அனுப்பியிருக்கிறோம் அதற்குரிய அறிவுறுத்தல் கிடைத்த பின் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
மேலும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று  நிலைமையானது அபாய நிலையிலேயே  காணப்படுகின்றது பொதுமக்கள் பொது முடக்கத்தினை துஸ்பிரயோகம் பண்ணாது தங்களையும்  பாதுகாத்து சமூகத்தையும் பாதுகாக்க  செயற்பட சகலவிதமான விழிப்புணர்வு செயற்பாடுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .

ஒவ்வொரு கிராமங்கள் தோறும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.