வியாபாரிகள் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்-மகேசன்

242 0

பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில்   சீனி மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு கடந்த காலத்தில் தட்டுப்பாடு காணப்பட்டது.எரிவாயு  பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுவிட்டது.

மேலும் சீனியினுடைய விலையும் தற்போது குறைவடைந்துள்ளது அதேநேரம் உணவு ஆணையாளர் திணைக்களம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களங்கள் இணைந்த வகையில் சீனியை பகிர்ந்தளிப்பதற்க்குரிய  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என  கண்காணிப்பதற்கு  ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது

பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் விநியோகத்தினை  தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வியாபாரிகள் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்றார்