பிரபல சிங்கள மொழிப் பாடகர் சுனில் பெரேரா காலமானார்

343 0

பிரபல சிங்கள மொழிப் பாடகரும் ஜிப்ஸிஸ் இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா(68 வயது) இன்று காலமானார்.

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது பாடல்கள் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களிடையேயும் பெரு வரவேற்பு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.