வரும் 30ல் தொல்லியல் பணி நிறைவு- சட்டசபையில் தகவல்

254 0

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு பணிகள், வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடையும் என கலை மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டசபையில் இன்று கலை மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, மணலூர், அகரம், கொந்தகை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை, ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என ஏழு இடங்களில் முறையாக தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுவருவதாக கொள்கை விளக்க குறிப்பில் தகவல் இடம்பெற்றுள்ளது.

புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர் , தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வு உள்பட அனைத்து பணிகளும் வரும் 30 ஆம் தேதி நிறைவடையும் என  கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.