தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது!

238 0

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 858 வாகனங்களில் பயணித்த 1,410 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.