சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது !

305 0

களுத்துறை மாவட்டம், இங்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது 7.5 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரன விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, இங்கிரிய காவற்துறை பிரிவுக்குட்பட்ட 20 ஏக்கர் பிரதேசத்தை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். இதன்போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு இங்கிரிய காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.