காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் கூறிய அறிவிப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான, மாறாத நிலைப்பாடு.
உள்ளக விசாரணையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்தது மிகச் சரியான முடிவு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது
அரசினதும் சிங்களக் கட்சிகளினதும் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து, அவர்களோடு சேர்ந்து வரலாற்றுத் துரோகங்களை புரிந்தவர்கள் தயவு செய்து சரியான தடத்திற்கு திரும்புங்கள். அல்லது தமிழ் இனத்தை அழித்தவர்களுக்கு துணை போனவர்கள் பட்டியலில் நிச்சயம் நீங்களும் வரலாற்றில் இடம்பெறுவீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

