பாராளுமன்றத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும், நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கும் மேற்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாராளுமன்றில் நேற்று சுமார் 80 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

