மட்டக்களப்பில் ஊரடங்கை மீறி திறந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

205 0

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ததுடன் வீதிகளில்  பிரயாணித்தவர்களை காவல்துறையினர் பிடித்து எச்சரித்து திருப்பி அனுப்பும் விசேட நடவடிக்கை ஒன்று இன்று  திங்கட்கிழமை (30) மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கொரோனா செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை (30) காவல்துறையினர் இரண்டாவது நாளாக  மற்றும் மாநகரசபையினர் இணைந்து புதூர் மற்றும் மாநகரசபை பகுதிகளிலுள்ள அனைத்து பிரதேசங்களில் வீதி ரோந்து நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊரடங்கு சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வியாராத்தில் ஈடுபட்ட சில வர்த்தகர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு தாக்குதல் செய்து கடைகளை பூட்டவைத்ததுடன் வீதிகளில் பிரயாணித்தவர்களை நிறுத்தி சோதனையிட்டு அநாவசியமாக வந்தவர்களை  வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.