டெல்டா வைரஸ் தீவிரமானதாக இல்லாமல் கூட இருக்கலாம்!-பேராசிரியர் இனோகா சீ.பெரேரா

147 0

கொவிட் வைரஸ் மனிதனுக்கு தொற்ற ஆரம்பித்ததன் பின்னர் அதன் பிறழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அதன் ஆற்றல் அதிகரிப்பதாகவும் பேராசிரியர் இனோகா சீ.பெரேரா தெரிவித்தார்.

இந்த வைரஸ் தொடர்பான முழுமையான தகவல்களை இன்னும் மனிதர்கள் அறியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த வைரஸ் தொடர்பில் தரவுகளை பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் டெல்டா பிறழ்வு நாம் நினைப்பதற்கு மாறாக ஆற்றல் குறைந்ததாக இருக்கவும் கூடும் என அவர் தெரிவித்தார்.