வவுனியாவில் சீனிக்குள் ரவை!

387 0

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இந் நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் சில வர்த்தக நிலையங்களில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.