தமிழகத்தில் கொரோனா தொற்று குறையும் நிலையில் மாஸ்க்-சானிடைசர் விலை உயர்வு

389 0

கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையை நிர்ணயித்தது.தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் கொரோனா தடுப்பு உபகரணங்களின் விலையை குறைக்க அறிவித்தது.

இதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையை நிர்ணயித்தது. இதன்படி என்.95 மாஸ்கை ரூ.22-க்கும், சர்ஜிக்கல் மாஸ்க் ரூ.5-க்கும் விற்பனைசெய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளிவந்தது.

இதனை மருந்து கடைகளில் ஆரம்பத்தில் முறையாக கடைப்பிடித்தனர். தற்போது அதன் விலை உயர்ந்துள்ளது.
மாஸ்க்

என்.95 மாஸ்க்கின் விலை ரூ.22-லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது. ரூ.44 இருந்து 100 வரையில் அந்த மாஸ்க்கை தற்போது விற்பனை செய்கிறார்கள். சர்ஜிக்கல் மாஸ்க்கின் விலை ரூ.10 ஆக அதிகரித்துள்ளது. சானிடைசர்கள் விலை ரூ.110-ல் இருந்து உயர்ந்துள்ளது. ரூ.150 முதல் 200 வரை (200 மி.லி) அதனை விற்பனை செய்கிறார்கள்.

இதனை தமிழக அரசு கண்காணித்து விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.