பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக வைத்தியருக்கு கொவிட் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக குறித்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அவர் தற்போது வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

