கோட்டா-ரணில் சந்திப்பு

151 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர். அதனடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தை மரணமடைந்துள்ளார். அவரது இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலிருந்து இன்றுக்கா​லை வெளியேறிவிட்டார்.

கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவின் வட்டாரங்கள் தெரிவித்தன.

.