ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை

170 0

தலிபான்களின் வன்முறையில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கரம் முற்றிலும் ஓங்கிவிட்டது. கடைசியாக தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ள அவர்கள், அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

தலிபான்களின் இந்த வன்முறையில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

வாடிகனில் நேற்று வாராந்திர வழிபாட்டின்போது இது குறித்து அவர் கூறுகையில், ‘அன்பு சகோதர சகோதரிகளே, ஆப்கானிஸ்தான் குறித்த ஒருமித்த அக்கறை கொள்வோரின் குழுவில் நானும் இணைகிறேன். அவர்களுக்காக அமைதியின் இறைவனிடம் என்னுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஆயுதங்களின் இரைச்சல் ஓய்ந்து, உரையாடலின் மேஜையில் தீர்வுகள் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.