கோவிட் தொற்று மிகவும் ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பிரபல நடிகை நயனதாரா விக்கிரமாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தனக்கு எந்த நோயும் இல்லை என்பதால் முதல் சில நாட்கள் அதிகம் கவலைப்படவில்லை, எனினும், பின்னர் கடுமையான சிக்கல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5ம் திகதி பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டதாக குறிப்பிட்ட அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார். முதல் மூன்று நாட்கள் இயல்பாக இருந்த தனக்கு அடுத்தடுத்த நாட்களில் நோய் தொற்றின் தீவிரத்தை உணரமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாசிக்க சிரமப்பட்டதாகவும், பேசுவதற்கும் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதும் பத்து வார்த்தைகள் பேசினால் சுவாசிக்க சிமரமம் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கோவிட் தொற்று ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையில் பிரபல நடிகை நயனதாரா விக்கிரமாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.