முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சரவை அமைச்சர் இந்திக அனுருத்த உட்பட சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிய விழாவுக்குப் பின்னர், அதிகார சபையின் கடமைகளை துமிந்த சில்வா பொறுப்பேற்றார்.

