முல்லைத்தீவு மாவட்டத்தில், உவர் நிலங்களை படிப்படியாக விளை நிலங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மாகாண விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் யாமினி சசிலன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 983 ஏக்கர் நிலங்கள் உவர் நிலங்களாக காணப்படுகின்ற நிலையில், அது தொடர்பில் அவரிடம் வினவிய பொதே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர். முல்லைத்தீவு மாவட்டத்தில், விவசாய திணைக்களத்தால் கடந்த காலங்களில் உவர் நிலங்களாக காணப்பட்ட நிலங்களில் உவர் தன்மையை நீக்கி பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றார்.
குறிப்பாக, சேதனப் பசளை பயன்பாடு மற்றும் உமி போன்ற பொருள்களைப் பயன்படுத்தல் என்பன ஓரளவு உவர் தன்மையை குறைத்து, சாதாரண நிலங்களாக மாற்றப்பட்டு பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், அவர் கூறினார்.
இதனால் ஓரளவு விளைச்சலை பெறக்கூடியதாக இருக்கும் 983 ஏக்கர் நிலத்தை சீராக்குவது என்பது கடினமான விடயம் ஆகும் எனத் தெரிவித்த அவர், இதில் அரைவாசிப் பகுதியையாவது மாற்றியமைக்ககூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

