இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொ லி ஸ் துஷ்பிரயோகம்அதிகரிப்பு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது

365 0

கோவிட் -19 தொற்றுநோய் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம் என்ற போர்வையில் இலங்கைபொலிஸார் அதிகளவில் ஆட்களை துஷ்பிரயோகம் செய்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களில்வெளியாகியிருந்த சமீபத்திய பொலிஸ் துஷ்பிரயோகங்களில் நீதிவிசாரணைக்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன அரசாங்கம் பொலிசாரின் சுயாதீன மேற்பார்வையைசீராக்கவேண்டும் அத்துடன் பொலிஸ் துஷ்பிரயோகங்கள்தொடர்பாக, அர்த்தபுஷ்டியான முறையில் விசாரித்து வழக்குத் தொடர வேண்டும். போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ. நா . அலுவலகம் மற்றும்பிரிட்டனின் ஸ்கொ ட்லாந்து பொலிஸ் போன்ற சர்வதேச பங்காளிகள், பொறுப்புக்கூறல் மற்றும் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்படும் வரை உதவித் திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.என்றும் நியூயோர்க்கை தளமாக கொண்ட அந்தஅமைப்பு தெரிவித்திருக்கிறது.

, “இலங்கையின்பொலிசார் தங்கள் செயற்பாடுகளை தூய்மைபடுத்துவதற்கு பதிலாக, தங்களின் கடந்தகால மோசமான துஷ்பிரயோக பதிவுகளை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர்மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

. “இலங்கை தரப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பம்
இல்லாமல்இருப்பதையும்துஸ்பிரயோகமான முகவரமைப்புகளுடன் செயற்படுவ து அபாயகரமானதென்பதையும் ஐ. நா. பிரிட்டன், மற்றும் இலங்கையின் சட்ட அமு லாக்கத்துடன் பணிபுரியும்ஏனையவர்கள்அடையாளம் கண்டுகொள்ளவேண்டுமென்றும் அவர்மேலும் கூறியுள்ளார். .

2021மேமுதல், கோவிட் -19 நோயாளர்களை அசாதாரணமான விதத்திலும்துஷ்பி ரயோகமான முறையிலும் தனிமைப்படுத்துதல் உட்படதொடர்புடைய சில சட்டவிரோத மரணங்களில்பொலிசார் சம்பந்தப்பட்டுள்ளனரென சுட்டிக்காட்டப்படுள்ளது

தற்போதைய பொலிஸ் துஷ் பிரயோகங்கள் ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் சிவில் மற்றும் அரசியல் வெளி சுருங்கும் சூழலில் வருகிறது. ஜூலை மாதத்தில் தனிமைப்படுத்தப்படும் இடமொன்றில் அமைதியான முறையில் எதிர்ப் பு ந டவடிக்கையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்துவது உட்பட, கருத்து சுதந்திரத்தை தடுப்பதற்கு கோவிட் -19 தொற்றுநோயை பொலிசார் பயன்படுத்துவதற்கு இலங்கை வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சட்ட அமு லாக்கமுகவரமைப்புகள் பல்வேறு நாடுகளிடமிருந்து சர்வதேச ஆதரவைப் பெறுகின்றன. ஸ்கொ ட்லாந்துபொலிஸ் மூலம் பிரிட்டன் அரசு பொலிஸ் பயிற்சி அளிக்கிறது. போதைப்பொருள் மற்றும்ஏனைய குற்றங்களுக்கான ஐ.நா அலுவலகம் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகளுக்கு ஆதரவளிக்கிறது,இந்த பிரிவுகள் நீண்டகாலமாக கடுமையான உரிமை மீறல்கள் , போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவை ,யாகும்.

இந்த நிலவரத்துக்கு தீர்வுகாண்பதற்கானஅரசியல் விருப்பம் வெளிப்படுத்தப்படும்வரை சர்வதேச பங்காளிகள் இலங்கை சட்ட அமு லாக்க நிறுவனங்களுடன் தங்கள் செயற்பாட்டை இடைநிறுத்த வேண்டும்.என்று மனித உரிமைகள்கண்காணிப்பகம் கூறியுள்ளது. இத்தகைய உதவி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து மேம்படுத்த விரும்பாத முகவரமைப்புகளு க்கு அங்கீகாரம் அல்லது சட்டபூர்வமான அங்கீகாரத்தை அளிக்கின்றன.

ஐ.நா.முகவரமைப்புகள் , இலங்கை பாதுகாப்பு படைகளுடனான எந்தவொருசெயற்பாடும் , “மனித உரிமைகள் தொடர்பான விடாமுயற்சி கொள்கையின்அடிப்படையில் ஐ. நா. அல்லாத பாதுகாப்புப் படைகளுக்கான ஐ. நா. ஆதரவு ” மற்றும் போதைப்பொருள் கொள்கை பற்றிய ஐ.நா.வின் பொதுவான நிலைப்பாடு என்பனவற்றுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் .

“ராஜபக்ச அரசு பொலிஸ் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச் சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரப்படும் என்பதை வெளிப்படுத்தவேண்டிய தேவை உள்ளது . மேலும் சட்டமானது

பொறுப்புக்கூறலைமேம்படுத்தவேண்டும் , அதை பலவீனப்படுத்தக்கூடாது” என்று கங்குலி கூறியு ள்ளார் . “அதுஇடம்பெறும் வரை, சர்வதேச பங்காளிகள் இலங்கையில் மனித உரிமைகள் பற்றி எந்தவித பிரமையும் இல்லாமல் இருக்க வேண்டும், என்பதுடன் அவர்கள் தவறான சட்ட அமு லாக்க முகவரமைப்புகளுக்கான உதவியை நிறுத்த வேண்டும்’.என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.