கொழும்பு மாநகரில் இதுவரை கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று முதல் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியின் வகை பற்றி கவனம் செலுத்தாது எந்தத் தடுப்பூசியையாவது செலுத்திக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

