கொவிட் நோயாளர்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்

317 0

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் 1999 அல்லது 0117 966366 ஐ அழைப்பதன் மூலம் தேவையான உதவியைப் பெற முடியும்.

நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது நிலைமை மோசமாக இல்லை என்றால் சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வது நல்லது என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் கூறினார்.