குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங் கள், இணையதளங்களில் தற்போது போலி யான தகவல்கள் பரப்பப்படுகின்றனஎன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
மிரிஹானை, நுகேகொடை, கல்கிசை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் தற்போது போலியான தகவல்கள் பரப்பப்படுகின்ற என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நபர் ஒருவரால் போலியான செய்தி அனுப்பி வைக்கப்பட்டது குறித்த நபர் மீண்டும் போலியான செய்தியை அனுப் பியுள்ளதாக கல்கிசை பகுதியைச் சேர்ந்த மூலத்த பொலிஸ் அதிகாரியால் மேற்கொள்ள விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு பயமும் கொள்ள தேவையில்லை என அஜித் ரோகண விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் தொடர்பாக கல்கிசை பகுதியைச் சேர்ந்த மூலத்த பொலிஸ் அதிகாரியின் தலைமையின் கீழ் விசேட விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

