போலி தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்தால் என்ன தண்டனை தெரியுமா?

256 0

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத சிலர் தடுப்பூசி அட்டைகளை களவாடி அதை வெறுமனே போலியாக நிரப்பி வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுனண் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெறுமனே போலியாக நிரப்பிய அட்டைகளை வைத்துக் கொண்டிருந்தால் அது சட்டப்படி நீங்கள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறீர்கள் என்ற அடிப்படையில், தங்களின் உத்தியோகத்தை இழந்து, சலுகைகளை இழந்து சிறைக்குள் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போலிகளை நம்பி உங்களை நீங்கள் இழந்து விடாதீர்கள். Covid-19 இற்கான தடுப்பூசி வழங்கலின் போது தகவல்கள் அனைத்தும் கணினியில் அதற்குரிய Tracker எனப்படும் மென்பொருளின் மூலம் பதியப்பட்டு வருகின்றது.

அதில் தடுப்பூசி ஏற்றியவர்களின் சகல விடயங்களும் உள்ளன. எதிர்காலத்தில் அலுவலக ரீதியாக அல்லது சட்ட ரீதியாக அல்லது வெளிநாட்டிற்கு செல்லும் போது பாவிக்க வேண்டிய அத்தாட்சி ரீதியாக கணினியில் பதியப்பட்ட மென்பொருளின் மூலம் கிடைக்கின்ற சான்றிதழ் மிக அவசியமாகத் தேவைப்படும் என்றார்.