எமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராடுவோம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எச்சரிக்கை

309 0

எமது இறுதி மூசசு இருக்கும் வரை நாம் போராடுவோம் அனைத்து உலகமும் சர்வதேசமும் எமக்கு உதவ வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி த.செல்வராணி  தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு கிழக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த நாங்கள் 12 வருடங்களாக எங்களது உறவுகளை தேடும் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகிய நாங்கள் இலங்கை அரசின் உலக நீதிப் பொறிமுறையையோ உள்ளக விசாரணை பொறிமுறையோ எங்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் 2018 பங்குனி மாதம் சர்வதேசதை நாடி அங்கு எங்களது 8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை நாங்கள் நாமாகவே முன் சென்று கொண்டு போராடி வருகின்றோம்.

எலும்புத்துண்டு விலைபோகும் சில நிறுவனங்கள் சிலர் 8 மாவட் ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டு. எங்களது கோரிக்கைகளை படிப்பதாக கூறி இலங்கை அரசுக்கு சோரம் போய் அவற்றை விற்று வருகின்றனர்.

அது மட்டுமல்ல இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் வருகின்றனர். தற்போது இருக்கும் ஜனாதிபதியிடம் எங்களது உறவுகளை ஒப்படைத்து இருந்திருக்கிறோம்.

இந்த ஜனாதிபதியாக இருக்கின்றவரின் காலத்தில்தான் அதிகமானோர் காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அரசுடன் பேச வருமாறு அழைக்கும் தருவாயில் நாங்கள் எங்களது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சரணடைந்த உறவுகள் யாரும் இன்று உயிருடன் இல்லை என்று கூறிய ஜனாதிபதி அவரும் அவருடன் இருக்கும் அமைச்சர்களும் கூறியிருக்கின்றனர்.

அவர்களுடன் சென்று எங்களது உறவுகளை பிரச்சினைகள் எவ்வாறு பேச முடியும் உறவுகளின் உயிருக்கு விலை மதிப்பில்லாத நிலையிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதனால் நாங்கள் ஜனாதிபதியை சந்திக்க விருமபிவில்லை .

இன்று அனைத்துலக சர்வதேச நீதிமன்றுக்கு எங்களது பிரச்சினைகளை நாங்கள் எடுத்துச் சென்று இருக்கின்றோம் சில நிறுவனங்கள் எங்களது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சிலரை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்த நினைத்து இருக்கின்றார்கள்.

எங்களது 8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே நீங்கள் யாரிடமும் சோரம் போக வேண்டாம் எங்களது உறவுகளின் கண்ணீரும் ஒவ்வொரு உயிர்களையும் தேடி நூற்றுக்கும் மேற்பட்ட உறவை இழந்து கொண்டிருக்கின்றோம் .

எமது இறுதி மூசசு இருக்கும் வரை நாம் போராடுவோம் அனைத்து உலகமும் சர்வதேசமும் எமக்கு உதவவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.