11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து முன்னாள் கடற்படை தளபதி விடுவிப்பு

196 0

பல்லாயிரக்கணக்கான மக்கள் பல தசாப்தகாலமாக “வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர்” எனவும் , உலகில் வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதென்றும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணா கொட மீது குற்றச்சாட்டு சுமத்தப் போவதில்லை என்று இலங்கை சட்டமாஅதிப ர் திணைக்களம் புதன்கிழமை முடிவு செய்த பிறகு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மன்னிப்புச்சபை இந்த அவதானிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

11பேர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போனதன் பின்னணியில் இலங்கை கடற்படை இருப்பதாக குற்ற ச் சாட்டுதெரிவிக்கப்பட்டிருந்தது. . பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போன நிலையில், உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையைகொண்டதாக இலங்கை உள்ளது.

இந்த வழக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு நீதி வழங்க இலங்கை அதிகாரிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. உதவி மற்றும் ஊக்கமளிப்பது மற்றும் கட்டளை பொறுப்பின் கீழ் சம்பந்தப்பட்டவை உட்படகுற்றநடவடிக்கைக்கு பொறுப்பு என்று சந்தேகிக்கப்படுபவை , விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன, “என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய-பசிபிக்பிராந்தியத்திற்கான பணிப்பாளர் யாமினி மிஸ்ரா கூறியுள்ளார்.

”இந்த வழக்கு ஏற்கனவே தடைகளால் சூழப்பட்டிருக்கிறது, இன்றைய தீர்மானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி சென்றடைவதைமேலும் பின்னடைவுக்காணவைக்கின்றது . சட்டமாஅதிபர்திணைக்களம் அதன் தீர்மானத்திற்கான காரணங்களை விளக்க வேண்டும்,மற்றும் இலங்கை அதிகாரிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டஅனைவருக்கும் உண்மை, நீதி ,இழப்பீடுகளை வழங்க வேண்டும் , “என்று ம் அவர் கூறியுள்ளார்.. “கடற்படை 11” வழக்கு 2008-2009 இல் 11 இளைஞர்கள்வலிந்து காணாமலாக்கப்பட்டதை குறிக்கிறது.

மன்னிப்புச்சபையின் அறிக்கையின்பிரகாரம் , 2018ஆகஸ்ட் டில் குற்றவியல்விசாரணை திணைக்களம் [சிஐடி) முக்கிய சந்தேகநபராக “நேவி சம்பத்” என்ற லெப்டினன்ட் கொ கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்தது. அப்போதைய பாதுகாப்பு தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரை பாதுகாத்ததாக சிஐடி குற்றம் சாட்டியது, மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது என்று சர்வதேசமன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது