கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய வேலைத்திட்டம்

176 0

நோய் அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்களை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் அவர்களது வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.