எதிர்காலத்தில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை

185 0

எதிர்காலத்தில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

‘மக்கள் தடுப்பூசியைப் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் உண்மையில் தடுப்பூசி பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, எல்லா நேரங்களிலும் தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதை நாங்கள் கட்டாயமாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் கணக்கெடுப்புக்களை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு விரைவாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.