பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட தீர்மானம்

211 0

ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தோருக்கு 2ஆம் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஷ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே தற்போது நிர்வாகத்தரப்பினர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.