தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்படமாட்டாது -அருந்திக பெர்னாண்டோ

189 0

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படமாட்டாது. வரி குறைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.

தேசிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

நாட்டுக்குள் தேங்காய் எண்ணெய் மாபியாக்கல் இடம் பெறுகின்றன. எக்காரணிகளுக்காகவும் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கபடமாட்டாது. என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். தர குறைவான மற்றும் வரி குறைவான தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்படமாட்டாது.

தேசிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உரிய நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
தேங்காய் எண்ணெய் தொடர்பில் கடந்த காலங்களல் பாரிய சர்ச்சைகள் காணப்பட்டன. தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் இதுவரையில் காணப்பட்ட முறைகேடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

தேங்காய் எண்ணெயின் விலையினை குறைப்பதற்கும், தேங்காய் எண்ணெயின் ஆரோக்கியம் தொடர்பில் ஆராய்வதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யட்டால் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு தேவையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளன.

கிராமிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்பவர்களை ஊக்கவிக்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு மற்றும் நடுத்தர தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தெங்கு உற்பத்தி இராஜாங்க அமைச்சினாலும், கிராமிய சமுர்த்தி வங்கிகளின் ஊடாகவும் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.