மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரையில் 2 இலட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதுவரையில் 2 இலட்சத்து 6 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அங்கு இதுவரை 8,525 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

