சிறுமியின் ஆத்மா சாந்திக்கு மெழுகுவர்த்தி ஏற்றவும்: இ.தொ.கா

246 0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய நாளை வியாழக்கிழமை (22) டயகமைக்கு தாம் நேரடியாக சென்று நினைவேந்தல் நிகழ்வொன்றை நடத்தவுள்ளதாகவும், நாளையதினம் மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சின் அலுவலத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை, 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு
வேலைகளுக்கு அனுப்பக்கூடாது என வலியுறுத்துவதாகவும் கூறினார்.

மேலும், இதற்கு மாற்று நடவடிக்கையாக தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் ஊடாகவும் , பிரஜாசக்தி நிலையத்தின் ஊடாகவும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.