மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
அதன்படி குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 117 பேர், கண்டி பகுதியைச் சேர்ந்த 51 பேர், கம்பளை பகுதியைச் சேர்ந்த 31 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

