மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வெடிபொருள் மீட்பு

239 0

மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான இன்று பகல் சந்திவெளி பிள்ளையார் ஆலைய வீதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் ; இருந்து ; வெடிபொருள் ஒன்றை பொலிசார் இராணுவத்துடன் இணைந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.