துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

222 0

கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்க உட்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரான துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொம்பனி தெருவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட காரணத்தினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து குறித்த நபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்து.

இருப்பினும் சந்தேக நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் 14 தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்றைய தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.