இலங்கை நபருக்கு இந்திய கடவுச் சீட்டு! விசாரணைகள் தீவிரம்

236 0

இலங்கையைச் சேர்ந்தவருக்கு இந்திய கடவுச் சீட்டு வழங்கப்பட்டது தொடர்பாக, கடவுச்சீட்டு அதிகாரி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய கடவுச் சீட்டு வழங்கியதாக கடவுச் சீட்டு அலுவலக கண்காணிப்பாளர் உள்பட மூவர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது .

மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது.