யாழ். பருத்தித்துறையில் 3 எறிகணைகள் மீட்பு

55 0

யாழ்.தென்மராட்சி, சரசாலை – பருத்தித்துறை வீதி புனரமைப்பு பணியின் போது அடுத்தடுத்து 3 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

வீதி அகலிப்பு பணியின் போது 122 மில்லி மீற்றர் அளவுடைய மூன்று எறிகனைகள் இனங்காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படடுள்ளது.

குறித்த எறிகணைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.