தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த கர்மவீரர் காமராஜரை போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி

248 0

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.