மின்சார உற்பத்தியி;ல் சீன நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கும் விதத்தில் இலங்கை மின்சார சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயல்கின்றது என இலங்கை மின்சார தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கதக்க சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்களிற்கு – அனேகமாக சீன நிறுவனங்களிற்கு அனுமதி வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என இலங்கை மின்சார தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை ஒரு யூனிட்டிற்கு 22 ரூபாய் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது அதேவேளை உள்நாட்டு மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து 8 ரூபாய்க்கே அரசாங்கம் கொள்வனவு செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் துமிந்த திசநாயக்கவின் தலையீட்டில் மின்சாரசட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தொழில்சங்கம் தெரிவித்துள்ளது.

