பாகிஸ்தானில் சீன நிதியுதவியுடன் நடைபெறும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரிவினைவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் இன்று சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பேருந்து தீப்பிடித்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 9 சீன தொழிலாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனத்தின் திட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சீன நிறுவனங்கள் பாதுகாப்பை நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.