வவுனியா நெடுங்கேணியில் ஆணின் சடலம் மீட்பு

277 0

வவுனியா வடக்கு – நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில், இலங்கட்டிக்குளத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சடலமானது பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவினைச்சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் வயது – 60 என்பவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (13.07.2021) மாலை, தனது மாடுகளைப் பார்ப்பதற்காகச் ;சென்றநிலையில், இலங்கட்டி குளத்தின் அணைக்கட்டிற்கு அருகாமையில் இன்று (14.07.2021) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த இறப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.