15 வயது சிறுமியை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற் காக விளம்பரம் செய்த சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பரிசோதனையை நிறுத்த தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
எவரது வற்புறுத்தல் காரணமாகக் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

