எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து சுகாதார வழிகாட்டியில் அறிவிக்கப்பட்டவில்லை

295 0
தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களில் ஆர்ப்பாட்டங்கள் குறித்து எந்தவொரு விசேட அறிவிப்பும் இல்லை என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுமதிக்க சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளதா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் வழங்கியுள்ளார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து சுகாதார வழிகாட்டியில் எதுவும் அறிக்கப்படவில்லை.
கொரோனா தொடர்பான தனிமைப்படுத்தல் குறித்து சுகாதார வழிகாட்டி வெளியிடப் பட்டுள்ளது.
சட்டம் குறித்து எங்களால் அறிவிக்க முடியாது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகளாலேயே முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.