முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி கூறினார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நெல் உற்பத்தி குறையும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஜெகாவத் அதை ஏற்பதாக உறுதி அளித்தார்.


