திரியாய்- 05ம் வட்டாரத்தில் கைக்குண்டு மீட்பு

263 0

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாழடைந்த வீட்டில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கைக்குண்டு இன்று (11)பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திரியாய் 5 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த முன்னாள் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் புஸ்பராசா என்பவரின் வீட்டிலேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த வீட்டு உரிமையாளர் யுத்த காலத்தின் போது திருகோணமலை நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் அவருடைய உறவினர்கள் காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது வீட்டுக்கு முன்னால் கைக்குண்டை கண்டதாகவும் இதனையடுத்து அருகில் உள்ள பொலி நிலையத்தில் முறையிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.