ஆடை மாற்றுவதை புகைப்படமெடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்

261 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகம வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவரின் அறைக்குள் புகுந்து அவர் ஆடை மாற்றும்போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் குறித்த வைத்தியர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.